இலங்கை மதுவரிக் கல்லூரி, பயிற்சி மற்றும் கல்விசார் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இது அதன் சகல பயிற்சியாளர்கள், வளவாளர்களிற்கும் சிறந்த வசதிகளை வழங்கும் வகையில் பெருமை மிக்கதாக விளங்குவதுடன் திணைக்களத்தின் மனித வளங்களின் உற்பத்தித்திறன், வினைத்திறனை மேம்படுத்துவதற்கான நவீன வசதிகளுடன் கூடியவாறு அதன் கொள்ளளவு வசதிகளையும் கொண்டுள்ளது.
1. விடுதி வசதிகள்
விதிவிடப் பயிற்சி பொருட்டு முழுமையான வசதிகளுடன் கூடிய 3 மாடி விடுதியானது, 39 பயிலுனர்களிற்கு வசதியளிக்கக் கூடியதாக உள்ளதுடன் பழைய விடுதியில் 50 பயிலுனர்களைப் பொதுவான வசதிகளுடன் அமர்த்த முடியும்.
2. விரிவுரை மண்டப வசதிகள்
முழுமையான வசதிகளுடன் கூடிய புதிய கேட்போர் கூடம் 60 பயிலுனர்களை உள்ளடக்கக் கூடியதாக உள்ளதுடன் பழைய விரிவுரை மண்டபத்தில் 90 பேரை விரிவுரைக்காக உள்ளடக்க முடியும்.
3. உணவக வசதிகள்
பொது உணவகத்தில் 50 பயிலுனர்கள் உணவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதுடன் அலுவலர் உணவகத்தில் ஒரு தடவைக்கு 12 அலுவலர் உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
4. அலுவலர்களின் வதிவிட வசதிகள்
பதவிநிலை அலிவலர்களிற்கு ஒதுக்கப்பட்ட வதிவிடத்தில் முழுமையான வதிவிட வசதிகள் இரு அலுவலர்ளிற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகப் பொறுப்பாளரிற்கு ஒரு வதிவிடமும் விடயப் பொறுப்பு அலுவலர்களிற்கு ஒரு வதிவிடமும் உள்ளதுடன் வளவாளர்கள், விரிவுரையாளர்கள் பொருட்டு 08 பேரை அமர்த்தக் கூடிய முழுமையான வசதிகளுடன்கூடிய வதிவிடம் ஒன்றும் காணப்படுகிறது.
5. ஏனைய வசதிகள்
60 பேர் அமரக்கூடிய பல்லூடக வசதியுடன் கூடிய கேட்போர் கூடம்
25 அலுவலர்களிற்கு பயிற்சியளிக்கும் வசதி உடைய கணனி ஆய்வுகூடம்
அச்சிடப்பட்ட, காட்சி, ஒலி வசதியுள்ள பல்வேறு விடய புத்தகங்களைக் கொண்ட நூலகம்
உடற்பயிற்சி, விளையாட்டு நடவடிக்கை பொருட்டு பெரிய ஒரு விளையாட்டு மைதானம்