inner banner new 2019

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பல்வேறு பதவிகள், தரங்களில் அமர்த்தப்பட்ட புதிய அலுவலர்களின் அறிவு, திறன் என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டும் சேவையிலுள்ள மதுவரி அலுவலர்களின் தொழில் தரங்களைத் தரமுயர்த்தும் பொருட்டும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடுதலும் விருத்தி செய்தலும் இலங்கை மதுவரிக் கல்லூரியின் முதன்மைப் பணிகளாகும். இலங்கை மதுவரிக் கல்லூரியானது, மதுவரிப் பரிசோதகர், மதுவரிக் காவலாளி, மதுவரிச் சாரதி ஆகிய பதவிகளில் அமர்த்தப்பட்டோரிற்கான பயிற்சி நெறிகள் மற்றும் சேவையிலுள்ள பதவிநிலை அலுவலர், ஏனைய தரத்திலுள்ள அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சிநெறிகள் என்பவற்றை திட்டமிட்டு நடத்தி வருகிறது.

65
hf

பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து மதுவரிக் கல்லூரியில் இருந்து வெளியேறும் பயிலுனர்கள், மரியாதை அணிவகுப்புடன் கூடிய வெளியேறுதல் வைபவத்தின் பின்னர், மதுவரித் தலைமை அலுவலகம், மதுவரி நிலையங்கள், விசேட நடவடிக்கைப் பிரிவு, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்கள் என்பவற்றுக்கு இணைக்கப்படுகின்றனர்.

மேற்படி பயிற்சி நெறிகளுக்கு மேலதிகமாக, உள்ளக வெளியக வளவாளர்களின் பங்களிப்புடன் திணைக்கள அலுவலர்களின் வருடாந்த பயிற்சித் தேவைகளை ஈடுசெய்யும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட துறைகளில் மதுவரிக் கல்லூரியினால் பல்வேறு கற்கைநெறிகள் நடத்தப்படுகின்றன. திணைக்களத்தின் மனிதவளப் பிரிவுடன் இணைந்து திணைக்களத்தின் பயிற்சித் தேவைகளின் பொருட்டு தரமான, நவீன ரக பயிற்சி நெறிகளைத் திட்டமிடும் நோக்கில், உள்ளக, வெளியக வளவாளர்களை உள்ளடக்கியவாறு, பல்தரப்பட்ட விரிவுரையாளர் குழாத்தினரின் ஒருங்கிணைப்புடனான பயிற்சி நெறிகள் மதுவரிக் கல்லூரியினால் மேற்கொள்ளப்படுகின்றன. .



FaLang translation system by Faboba